பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ماه مه சைவாதலால் பாடல்களில் மிடுக்கும் பெருமிதமும் புலனா முருகனைப் பற்றியவை; சுடலை முத்துப் பிள்ளையவர் கள் வேண்டுகோளுக்கிணங்க செந்தில் முருகன்மீது பாடிய னவாக மூன்று பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று: தண்டனை போதுமையா! தாங்கமுடி யாதையா! கொண்டபிணி நீங்கஅருள் கூறையா! - கண்டுனது வாசலில் வந்து வணங்கவலி இல்லை.ஐயா! ஈசனே செத்திலிறை வா! (2) என்ற இப்பாடல் அப்போது கவிமணி ஆஸ்துமா நோயால் பீடிக்கப் பெற்றிருந்த நிலையைக் காட்டுவது. நித்தா ஸ்துதியாக ஒரு பாடல்: தந்தை மலையாளி; தாய்மாமன் மாட்டிடையன்; வந்தஒரு மச்சானும் வானியனே - சந்ததமும் விண்முகத்தை எட்டும்.அயில் வேலேந்து பன்னிருகைச் சண்முகற்குச் சாதியெது தான்? ' இது, தந்தை பிறந்திறலாத் தன்மையினால் தன்மாமன் வந்து பிறந்திறக்கும் வன்மையினால் முந்தொருநாள் வீணிக்கு வேளை எரித்தான் மகன்மாமன் காணிக்கு வந்திருந்தான் காண்' என்ற காளமேகப் புலவரின் பாடல் பாணியில் அமைந்துள் எது. 12. B.மா கதம்பம் - முருகன் நித்தாஸ்துதி 13. தனிப்பாடல்