பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 62 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு விக்கிரகம் உண்ணாதிருப்பதைக் கண்டு மீரா வருந்தி மெய்சோர்ந்து கிடக்கின்றாள். உடனே விக்கிரகம் நைவேத் தியத்தை ஏற்று உண்கின்றது. இவ்விதத்தில் கண்ணப்ப நாயனார் குடுமித் தேவரைத் தம் நைவேத்தியத்தை உண் ணச் செய்ததும், திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பி என்ற சிறுவன் அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பொல் லாப் பிள்ளையாரைத் தான் படைத்த கொழுக்கட்டையை உண்ணச் செய்ததுமான வரலாறுகள் நம்மை நினைவுகூரச் செய்கின்றன. விக்கிரகம் நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டதால் களிப்புற்ற மீரா கிரிதரனை வருணித்து மகிழ்கின்றாள். - மூன்று பாடல்களில், அவற்றில் இரண்டை ஈண்டு தருகின் றேன். நந்த குமரன் வடிவழகை நானும் கண்ட நாள்முதலா இந்த உலகம் மேலுலகம் இரண்டும் வேம்பே ஆனதம்மா! முந்து மயலின் தோகை,அவன் முடியின் மணிபோல் ஒளிவிடுமே: சக்தத் திலகம், ஈரேழு தலமும் அடிமை கொண்டிடுமே (20) அம்பொற் குழைகள் மிசையாட அரைஞாண் சதங்கை இசைபாட, நம்பன் கண்ணன் அழகியவோர் நடனாய் வந்து நடிக்கின்றான் உம்பர் தொழும்அவ் வுத்தமனின் உவமை காணா உறுப்பழகுக்கு இம்பர் எளியேன் அர்ப்பணமாய் என்னை இன்று வைத்தேனே (22)