பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் -j- 63 -}. ஒருமுறை மீரா சமாதி நிலையில் இருக்கும்போது கண்ணனுடைய தரிசனம் கிடைக்கின்றது. சமாதி கலைந்து மகிழ்ச்சிப் பெருக்கால் பாடுகின்றாள். கார்முகிலின் மேனிபெறும் நந்தகுமாரா: என்றன் கண்களிலே குடியிருப்பாய் - நந்தகுமார! மார்பினிலே வைஜயந்தி மாலையணியும் - உன்றன் வடிவினிலே மயங்கி நின்றேன்: நந்தகுமாரா: ஆரமுதம் ஊறுதமிழ் மீதிலமரும் - குழல் அழகினுக்கோர் அளவுமுண்டோ நந்தகுமாரா! சேருமனி யாடரைஞாண் பாதச் சதங்கை - ஒலி செய்திடவே வந்தருள்வாய், நந்தகுமாரா: பாரும்வவிண்ணும் பணிந்துதொழும் நந்தகுமாரா! - என்றும் பத்தரையாள் ஈசன்நீயே நந்தகுமாரா: (30) இந்தப் பாடல் பாரதியின், 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா" என்ற பாடலை நினைக்கச் செய்கின்றது. போஜராஜன் போரில் இறந்து படுகின்றான். அவன் தம்பி உதயசிம்மன் ராணாவாகின்றான். மீராவின் திருமால் பக்தியைக் கண்டு வெறுப்படைந்து அவளைக் கொல்ல முயலுகின்றான். அவன் செய்த முயற்சிகள் பயனற்றுப் பேகின்றன. இதனையறிந்த மீரா பாடுகின்றாள்: தனியா அரவின் கூடையொடு சாளக் கிராமம் ஆயிடுமே: அணியார் கிண்ணத் தருநஞ்சும் அமுதாய் இனிமை தந்திடுமே! 19. பா.க: தோ.பா. நந்தலாலா