பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 64 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு திணியார் குலப் படையுமலர்ச் சேக்கை யாக மாறிடுமே! மணியார் வண்ணன் அடியாருளம் மலையா தென்றும் காப்பானே (31) நாட்டை விட்டு மீரா பிருந்தாவனம் வந்து சேர்கின் றாள். அங்குள்ள கண்ணன் கோயில் அடைத்துக் கிடக்கின் றது. மீரா அதைத் திறக்கும்படி பாடுகின்றாள். ஆளடிமை யாகஎனை அமர்த்திக்கொள்வாய், அழகாக நந்தவன வேலைசெய்வேன்; நாள்விடிய எழுந்துன்னை நமஸ்க ரிப்பேன்; நலமிகவே நின்கதைகள் பாடி நிற்பேன்; மீள்கூலி யாயுனது காட்சி போதும்; மேற்செலவுக் குன்நாம செயமே போதும்; நீள்செல்வம் பத்தியலால் வேறொன் றில்லை; நித்தியனே! நின்மலனே! நிகரில் லோனே! (32) பொருவரிய யோகியர்,மா தவத்தின் மிக்கோர், புள்ளுயர்த்தோன் அடிமறவாப் பத்தி செல்வர் பெருமைதரு மாபிருந்தா வனத்தில் இன்று பேறுபல பெற்றிடவே கூடி நின்றார்; அருமறைக்கும் எட்டாத ஆதி நாதன் அரையாமத் தன்புநதிக் கரையில் வந்து கருதரிய கண்காட்சி தருவான்; சற்றும் கலங்காம லிருப்பாய்என் ஏழை நெஞ்சே! (33) பாட்டு முடியவும் கதவு திறக்கின்றது; கண்ணனை வழிபட்டுக் கொண்டு மீரா அங்கே இருந்து வருகின்றாள். இந்த நிகழ்ச்சி திருமறைக்காட்டின் (வேதாரண்யம்) மூடி யிருந்த திருக்கோயிலின் திருக்கதவு திறக்குமாறு அப்பர்