பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் -j- 65 + அடிகள் பதிகம் பாடியதும்" கதவு திறக்கும் நிகழ்ச்சியை நினைக்கச் செய்கின்றது. பிருந்தாவனத்தில் காலம் கழித்த மீரா ஒருநாள் தன்னை ஏற்றுக் கொள்ளும்படிக் கண்ணனை வேண்டுகின் றாள். என்றும் எனைகீ ஏற்றுக்கொள்; எனக்குத் துணைவே றெவருமில்லை; கன்று பசியும் எனக்கில்லை; கண்ணில் உறக்கம் சிறிதுமில்லை; துன்றும் உடலும் குறுகி,ஒரு துரும்பாய்த் தேய்தல் கண்டிலையோ? நன்று தருவாய்; எனைக்கூடி நடுவிற் பிரியா தருள்வாயே (34) விக்கிரகம் இரண்டாய்ப் பிளந்து மீராவைத் தன்னுள் அடக்கிக் கொள்ளுகின்றது. மீரா தனது அறுபத்தேழாம் வயதில் முக்தி அடைகின்றாள். இந்த நிகழ்ச்சி திருவரங்கப் பெருமானின் திருமேனியில் ஆண்டாள் கலந்த நிகிழ்ச்சி யையும், திருப்பாணாழ்வாரை அரங்கநாதன் தன் திருவடி யில் ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியையும் நினைக்கச் செய் கின்றது. இரட்சிகர். சமயப் பொறை சமரச நிலை ஆகிய இவை தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள். தமிழ்ப் பண்பாட்டின் உருவமான கவிமணி இயேசு பெருமானைப் பற்றியும் பாடியுள்ளார். இப்பாடல்கள் முப்பதும் தெய்வத் தமிழில் அடங்கும். இப்பாடல்கள் சுருக்கமாக அப்பெருமான் வர லாற்றையும் அவர் மன்பதைக்கு உரைத்த செய்தியையும் குறிப்பிடுகின்றன. 20. அப்பர் தேவாரம் - 5.10