பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களின் கல்விக் கொள்கைகளை எளிமையாக எடுத்துக் கூறுகி றார். அவர்கள் கொள்கைகள் மூலமாகக் குழந்தைக் கல்வி முறைகளைக் கூறுகின்றனர். கவிமணியின் குழந்தைப் பாடல் களோ கற்பித்தல் முறைக்குச் செயல்முறை வடிவம் கொடுக்கு மாற்றினை விளக்குகிறார். கவிமணியின் கவிதைகளில் வெளிப்படும் தேசபக்தி உணர்வைப் பாரதியார், பாரதிதாசன் ஆகியோரது உணர்வுக ளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து கூறுகிறார். விடுதலைக்காகப் பாடுபட்டோர் மிதவாதிகள் தீவிரவாதிகள் என்ற இரு வகை யாகப் பிரிந்து செயல்பட்டனர். பாரதியாரின் கவிதைகளில் தீவிர தேசபக்தக் கனல் வீசுவதை எடுத்துக்காட்டும் பேராசிரி யர் பாரதிதாசனைப் பற்றிக் கூறும்போது 'பாரதிதாசன் கவிதைகளில் நாட்டுப்பற்று இல்லாமலில்லை. ஆனால், சமூக நீதிகளைக் கண்டிக்கும் போக்கும் தந்தை பெரியாரின் கருத்துக் களும்தான் அவர் பாடல்களில் தலைதூக்கி நிற்கின்றன.' என்று திறனாய்கிறார். கவிமணியைப் பற்றிக் கூறும்போது 'கவிமணி வாழ்ந்த சூழ்நிலை காரணமாக இவர்தம் பாடல்கள் நாட்டுப்பற்றின் இனிய மணம் கமழ்வதாக அமையவில்லை. ஆனால், நாட்டுப்பற்றிற்குரிய பொருள்களை இவர் பாடவே இல்லை என்று கருதவும் முடியாது' என்ற கருத்துரைக்கிறார். தேசக்கொடியின் சிறப்பு. கதர் விற்பனை, வட்ட மேசை மாநாடு முதலான தலைப்புகளில் பாடி அவரும் தேசிய நீரோட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவராக அமைந்து விடுகின்றார். கவிமணியவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் சுதந்திரம் பற்றி அவர் பாடிய இரு பாடல்களுமே சுதந்திரம் பெற்றபின் பாடப் பெற்றவையே என்ற செய்தியையும் தருகிறார். கவிஞரின் கடவுள் கொள்கையை ஆராய்கின்ற பேராசிரி யர் தாயுமான சுவாமிகள், குமரகுருபரர் ஆகியோரின் கருத் துக்கள் இவர்தம் பாடல்களில் காணப்படுகின்றன என்ற கருத்தைத் தெரிவிக்கிறார். கவிஞரின், கோவில் முழுதும் கண்டேன் - உயர் கோபுரம் ஏறிக் கண்டேன் தேவாதி தேவனையான் - தோழி! தேடியும் கண்டிலேன்