பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 72 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? தீயவும் நல்லவும் செய்தவரை - விட்டுச் செல்வ தொருநாளு மில்லை ஐயா! (63) முன்னைப் பிறப்பினில் செய்தவினை - யாவும் முற்றி முதிர்ந்து முளைத்தெழுந்து பின்னைப் பிறப்பில் வளர்ந்திடும் என்பது பித்தர் உரையென தெண்ணினிரோ? (64) நெஞ்சினில் வாயினில் கையினில் - செய்திடும் நீதி அநீதிகள் யாவையுமே வஞ்சமி லாது மறுபிறப்பில் - உம்மை வந்து பொருந்தாமல் போயிடுமோ? (65) ஆதலால், தீவினை செய்ய வேண்டா - ஏழை ஆட்டின் உயிரையும் வாங்க வேண்டா பூதலந் தன்னை நரகம் தாக்கிடும் புத்தியை விட்டுப் பிழையும்ஐயா! (69)* என்பன போன்ற அறிவுரைகளும் என் மனக் காதில் கேட்டன. 'புத்தரும் சுஜாதையும் என்ற தலைப்பில் உள்ள பாடல் களை என் மனம் அசை போட்டது. புத்தர் சுஜாதை படைத்த உணவை உண்டு உடல் வலியுற்றதனையும், சிந்தை முற்றும் தெளிந்த நிலையும் உடையவராகி, வாடா மலர்கள் மலர்ந்து சொரியும் போதி விருட்சம் பொலிபூங் காவினை நாடிச் சென்றனன் ஞானம் பெறவே" 27. மேலது - கருணைக்கடல் - 58, 61, 63, 64, 65, 69 28. மேலது புத்தரும் கஜாதையும் (அடி - 237-239)