பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் + 73 米 என்ற செய்தியையும் என்மனம் சிந்தித்தது. அப்போது நானும் என் மனைவியும் போதி மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்ததை நினைந்து பார்த்தேன். சுஜாதை தவம் செய்து பெற்ற மகன் இறந்து விடுகின் றான். இந்நிலையில் மீண்டும் அவளிடம் வந்த புத்தர் பெருமானை நோக்கி தன் மகனை உயிர்ப்பிக்குமாறு வேண்டுகின்றாள். அவர் அவளுக்கு அறிவுரை பகர்ந்து, 'பிறப்புளதேல் இறப்புமுண்டு என்ற உண்மையைப் போதிக்கும் காட்சி என் மனத்திரையில் காணப்படுகின் றது. இப்பகுதியிலுள்ள பாடல்கள் உள்ளத்தை உருக்கு L G}థ. மகனை அரவு தீண்டிய செய்தியினைக் கூறுகின்றாள். கண்டோர் பலர் அதற்கு மருந்து கூறுகின்றனர். கண்டாரில் மிக்கஉளக் கனிவுடையார் ஒருவர் 'காரிகையே! மலைமீது காவியுடை அணிந்து முண்டிதமாய் அலையும்ஒரு முனிவர்.அடி பணிந்தால் முடியாத காரியமும் முடியும்என உரைத்தார் (14)* புத்தரிடம் மகனிழந்தாய் கதறுதுவதைக் கூறும் பாடல் கள் கல்நெஞ்சத்தையும் கரைப்பவை; கண்ணிலான் பெற் றிழந்தான் என உழந்த நிலையில் கன்றொழிந்த காராவின் கலக்கம் எய்திய காரிகை அரற்றிய சில பாடல்கள்: வாய்முத்தம் தாராமல் மழலையுரை யாடாமல் சேய்கிடத்தல் கண்டெனக்குச் சிந்தைதடு மாறுதையா! (18) 29. ஆ.சோ: புத்தரும் மகனிழந்த தாயும் - 14