பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ཨར་བྷི་ཧཱི་མ་ கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு முகம்பார்த்துப் பேசாமல் முலைப்பாலும் உண்ணாமல் மகன்கிடக்கும் கிடைகண்டு மனம்பொறுக்கு தில்லை.ஐயா! (19) 'பின்னி முடிச்சிடம்மர் பிச்சிப்பூ சூட்டிடம்மா' என்னும் மொழிகளினி எக்காலம் கேட்பனையா? (21) நெஞ்சிற் கவலையெல்லாம் நிற்காமல் ஒட்டும்.அந்தப் புஞ்சிரிப்பைக் காணாது புத்திதடு மாறுதையா (22) துள்ளிவிளை யாடஎன்றன் சுந்தரனைத் தேடிவரும் புள்ளிமான் கன்றினுக்குளப் பொய்சொல்லி நிற்பனையா? (26) குஞ்சை யிழந்தகுயில் கூவியழக் கண்டகனா நெஞ்சை யறுக்குதையா நினைப்பொழிய மாட்டாதையா! (28) கொம்படர்ந்த மாவின் குலையடர்ந்த பூம்பிஞ்சு வெம்பிடவிழக் கண்டகனா மெய்யாய் விடுமோ,ஐயா! (29) தாயாகி உள்ளம் தருக்கி யிருந்ததுபோய்ப் பேயாகி இன்று பிணந்துக்கி நிற்பேனோ? (31)