பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் + 75 + "இந்தப் பிறவியில்யான் எப்பிழையும் செய்தறியேன், எவ்விதம் என்வயிற்றில் இவ்விடியும் வீழந்ததையா?" (32) மகப்பேறு இல்லாத கவிமணி ஒட்டவுனர்தல் (Empathy) நிலையடைந்து கதறும் நிலை எய்தினரோ? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. இந்தக் கதறலைச் செவிமடுத்த புத்தர்பிரான் சுகுண சுந்தரி சுஜாதைக்கு அவள் கவலை தீர்க்கும் மருந்தொன்று கூறுகின்றார்: "தாயே நின்மனக்கவலை - ஒழிந்திடத் தக்கநல் மருந்தளிப்பேன்; சேயினை எழுப்பிடுவேன் - விளையாடித் திரியவும் செய்திடுவேன் (34) நாவிய கடுகுவேண்டும் - அதுவுமோர் நாவுரிதானும் வேண்டும்; சாவினை அறியாத - வீட்டினில் தந்ததா யிருக்கவேண்டும்: (35) பக்கமாம் பதிகளிலே - சென்றுநீ பார்த்திது வாங்கிவந்தால் துக்கமும் அகலுமம்மா - குழந்தையும் சுகமாக வாழுமம்மா (36) சுஜாதா குழந்தையைத் தன் மார்பிலணைந்து கொண்டு எங்கும் சென்று கடுகு இரந்து வெறுங் கையளாகித் திரும்புகின்றாள். திரும்பியவள் புத்தர் பெருமானிடம் தன் அநுபவத்தை நவில்கின்றாள். இரந்து சென்றபொழுது ஒருத்தி மட்டிலும் பரிவுகொண்டு,