பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைத்தமிழ் * 8址 + பாடுதல் பொருத்தமாகுமா? என்று சிலர் வினவலாம். சாகித்தியம் இயற்றபவர்கட்குச் சங்கீதம் பயிற்சி அமைந்தி ருப்பது அருமை; இங்ங்னமே சங்கீதப் பயின்றவர்கட்குச் சாகித்தியத்திற்கு வேண்டிய மொழிப் பயிற்சி பெரும்பா லும் இருப்பதில்லை. இன்று தமிழ்நாட்டில் வழங்கிவரும் பதங்களும் கீர்த்தனங்களும் மொழி பற்றிய அளவில் 'பிழை மலிந்த சருக்கங்களாக இருப்பதன் காரணம் இதுவேயாகும். வடமொழியிலுள்ள பதங்களும் கீர்த்தனங் களும் பிழை மலிந்துள்ளன என்று வடமொழி வாணர்கள் சொல்லக் கேட்டதுண்டு. இக்குறை நீங்க வேண்டுமாயின் பாடலாசிரியரும் இசை அமைப்பவரும் வேறு வேறாக இருக்க வேண்டும். நந்தமிழ்நாட்டில் பெரும்பாலும் பாட்டு இயற்றுபவர் வேறாகவும், பண் அமைப்பவர் வேறாகவும் தொன்றுதொட்டு நெருக்கமாக இருந்து வருவ தைக் காணலாம். 'பரிபாடல் என்னும் தொகை நூலை நோக்கும் போது இவ்வுண்மை தெளிவாகும். ஒவ்வொரு பாடலின் அடியி லும், கடவுள் வாழ்த்து ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு மருத்துவன் நல்லச்சுவனார் இசை பண்ணும் பாலையாழ் - பரிபா-8 என்றும் கடவுள் வாழ்த்து நல்லச்சுதனார் பாட்டு கண்ணகனார் இசை பண்காந்தாரம் - பரிபா - 21 கவி-7