பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 82 * என்றும் குறிப்பிட்டிருத்தல் இதற்குச் சான்றுகளாகும். தவிர, சைவத்திருமுறைகளைத் தொகுத்தவர் திருநாரை யூரைச் சார்ந்த நம்பியாண்டார் நம்பி; தேவாரப் பதிகங்க ளுக்கு பண் அமைத்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந்தருளிய திருவெருக்கத்தம் புலியூரைச் சார்ந்த திருநீல கண்டப் பெரும்பாணர் மரபிலே பிறந்த அம்மையார் ஒருவர் என்பது வரலாறு. அங்ங்னமே நாலாயிரத் திவ்வி யப் பிரபந்தத்தைத் தொகுத்து அடைவு படுத்தியவர் காட்டு மன்னார் கோவிலைச் சார்ந்த நாதமுனிகள்; இப்பாசுரங்க ளுக்கு முதன் முதலாக இராக - தாளங்களை அமைத்தவர் அப்பாவு முதலியார் (1865). இவர்தான் முதன் முதலாக நாலாயிரத்தை அச்சியற்றியவர். மேலை நாடுகளிலும் சாகித்தியம் இயற்றுவோரும் இசையூட்டுவோரும் வேறு வேறாகவே இருப்பதுவே வழக்கம் என்றும் அறியக் கிடக்கின்றது. இவ்வழக்கங்களுக்கேற்பவும் தமிழின் நயம், கவித்துவத்தின் நயம் இவற்றைப் பேணவும் கவி மணி இக்கீர்த்தனம் முதலியவற்றைப் படைத்துள்ளார். இசையூட்டுவோர் கீர்த்தனங்களைப் பலமுறை கற்று அவற்றின் இசை பாவங்களில் ஊறி, அதன் பின்னர் தக்கதாய இசையை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். இன்றைய திரைப்படவுலகில் பாடல்களை இயற்றுவோ ரும் பண் அமைப்போரும் வேறு வேறாக இருப்பதையும் காண்கின்றோம்.