உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

பரந்த அலைக்கரம் நீட்டி யணைத்துப்
பரிந்து தழுவிடவே - ஆற்றின்
வரவெதிர் பார்த்துக் கருங்கடல் கூட
வருந்திடக் கூடுமெனின்.

"கடுகள வும்பய னின்றியே காய்ந்ததன்
கல்லும்மண் ணும் தெரிய - அந்தோ
அடியொடு வற்றிடுமாற்றை நினைக்கையில்
அழுகையும் பீரிடுதே!

130