இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்டான்
முழுதும் வானில் முத்து திர்க்க
முந்தித் திங்கள் தெரியுது;
மோகனத்தின் சீவனாக
முனைந்து நிலவைச் சொரியுது:
தொழுது கூட நெஞ்சில் தோன்றும்
தூய காதல் அரியது;
தொடர்ந்து மாலைப் பொழுது நாளும்
தோன்றி உதவி புரியுது!
24