பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 எண்சீர் விருத்தம் ஒழுக்கத்தின் உறைவிடமே! தொண்டும் பண்பும் ஒன்றாகி உருவெடுத்த நல்லோய்! மக்கள் அழுக்ககற்றும் திருக்குறளின் வார்ப்பே எங்கள் ஐயாவே! அருளுற்றே! அன்பும் நண்பும் பழுத்திருக்கும் குளிர்தருவே! தொன்று தொட்டுப் பாங்குயர்ந்த குடிப்பிறப்பே! ஏழை மக்கள் வழித்துணையே! மணித்திருநாள் பெற்றோய்! நின்றன் வாழ்வெல்லாம் நலம்பெற்று வாழ்க வாழ்க (2) நின்னுடலில் தென்னாட்டுக் கருமை கண்டேன் நெஞ்சத்தில் சொல்லரிய செம்மை கண்டேன் நின்சொல்லில் நிலைத்திருக்கும் உண்மை கண்டேன் நீயுடுத்தும் ஆடையினில் வெண்மை கண்டேன் பொன்விரும்பாப் புகழ்விரும்பாத் தொண்டு ளத்தால் புரிகின்ற செயலிலெலாம் நன்மை கண்டேன் எந்நிலையும் எப்பொழுதும் அன்பா! நின்றன் இயல்புடைய வாழ்க்கையினில் குறளைக் கண்டேன் (8) ஆடவர்கள் எந்நிலத்து நல்லர் உள்ளார் அந்நிலத்தை நன்னிலமென் றவ்வை சொன்னாள்; தேடரிய செயல்வீர! சுப்ர மண்யச் செம்மலுன்னால் புதுக்கோட்டை புதிய கோட்டை நாடறிய ஆயிற்று; நின்னால் மேலும் நல்லவரும் பலரானார்; ஊர்கள் தோறும் பாடுபட ஒரொருவர் நின்போல் தோன்றின் பழம்பெருமை பேச்சிலன்றிச் செயலிற் காண்போம் (4)