பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இந்நாளில் ஒருசிறிய நன்மை செய்தோர் இருநிலத்தார் அறியும்வகை எடுத்து ரைப்பர் பொன்னோடு புகழ்விரும்பிச் செய்தித் தாளில் புகழ்ந்தெழுதப் பொருள்கொடுப்பர்; பொய்ம்மை யன்று: முன்னாக நாற்பஃதாண் டெல்லை நீயே முனைந்திருந்து நற்பணிகள் ஆற்று கின்றாய்! இந்நாளும் பிறரறிய தடக்கி வைத்தாய்! என்போல்வார் பாட்டுக்கு மறைந்தா போகும்? இவ்வுலகில் தீமையைத்தான் மறைத்துச் செய்வர்; நன்மைகளை ஏன் மறைத்துச் செய்கின் றாய் நீ? செவ்வியனே நீ மறைத்துச் செயினும் எங்கள் சிறுசெந்நா பறையறைந்து யாண்டும் சாற்றும்; ஒவ்வியதே நின்னடக்கம் பெருமை காட்டும்; உலகுக்கு நாங்கள் சொலல் நன்றி காட்டும்; எவ்வகையால் முயன்றாலும் புலவன் நாவைத் தடைப்படுத்த இயலுவதோ? அடங்கா தன்றோ ! எழுத்தறிய மாட்டாமல் ஏங்கும் நாட்டில் எண்ணரிய திருப்பணிகள் எங்கும் ஆக்கி வழுத்துகின்ற மாந்தருக்கு நன்றுசொன்ன வாய்மொழியைப் பாரதியின் பாடல் தன்னை வழுத்தி அதை வாழ்வாக்கிக் கல்வித் தொண்டை வழுவாமல் ஆற்றுவதே கடவுள் தொண்டென் றழுத்தமுற மனத்திருத்தி நாளும் செய்வாய்! அறநெறியின் தனிமுதலே! வாழ்க வாழ்க! (5) (6) (7)