பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவகோட்டைத் திருவள்ளுவர் விழாக்-சுவிட்டிங்ஆன், ■* ■ _ frt-to- - SAEřł# *tyz+EHB## முயல்வோம் வெல்வோம் எண்சீர் விருத்தம் செந்தமிழ்க்கோர் உயிர்நிலையாம் குறளைத் தந்த செந்நாவன் புகழ்பா டக் குழுமி யிங்கு வந்திருக்கும் பாவலரே! குறையாச் செல்வ வளந்தழைத்த அருள் பழுத்த தேவ கோட்டை தந்திருக்கும் பெருமக்காள்! ஈர நெஞ்சத் தாய்க்குலத்தீர்! வள்ளுவர்க்குத் திருநாள் செய்ய முந்தி.எழும் ஆர்வத்தீர்! உங்கட் கெல்லாம் முழுமனத்தால் வாழ்த்துரைத்து நன்றி சொல்வேன் (1) செட்டிநாடு பழமைபெறு முக்கனிபோல் இனிக்கும் எங்கள் பைந்தமிழின் இசைவளத்தை, வஞ்ச நெஞ்சம் குழுமியொரு கூட்டமைத்து மறைத்து விட்டுக் கொடுமைசெயக் கண்டிருந்தும் தாளம் போட்டோம்; முழுமதியைக் கருமுகில்கள் சூழ்ந்து வந்து முகமறைத்த பொழுதத்துச் சிதறி ஒட எழுவளிபோல் பகைவிரட்டித் தமிழ்மொ ழிக்கே இசைவளர்த்துப் பெருமைகொண்ட திந்த நாடே (2) _ - _ குழுமி - கூடி வளி - காற்று