பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 நாட்டு வள மெல்லாம் மாற்றான் சுரண்டிந ைம ஒட்டாண்டி யாக்கி ஒடுக்கியதா லன்றோ? மடக்கும்பிடிப்பகற்றி வாழ்வோமேல் இங்குக் கிடைக்கும் வள மெல்லாம் கேடின்றி நாம்பெறுவோம் ; வாகைசூட வாரீர் ! நாட்டுக்கு வேண்டும் நலம்பெற்ற நம்நாட்டை வேட்டைக் களமாக்கும் வேற்றுப் புலத்தார்க்குத் தாள்பணிந்து மாளாதீர்! தாவிப் புறப்படுவீர்! வாழ்விழந்து போகாமல் வாகை பெறவாரீர்! தன்னாட்சி பெற்றுத் தனிய ரசாய் வாழ்ந்திடுவோம் பன்னாட்டுப் பேரவையில் பங்குபெற்று வாழ்வோம்நாம் வந்த சிறுமொழிகள் வாழ வழிவகுக்கும் சந்ததிகள் நம்நாட்டில் சேராமல் செய்திடுவோம் கோழைகளாய் மோழைகளாய்க் கூன்விழுந்த நெஞ்சினராய் ஏழைகளாய் வாழ இனியும் கருதாமல் கூடித் திரண்டெழுவீர்! கொட்டிடுக போர்முரசம் நாடித் திருநாட்டில் நம்மாட்சி நாட்டிடுவோம் வாழ்க திருநாடு வாழ்க நமதுரிமை வாழ்கநம் நாட்டின் வளம் , syste கி. இ\ میان == |