பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சேருங்கரையுண்டு செந்தமிழர் நாகரிகம் கூறுந் துறைமுகங்கள் கூடிக் கிடப்பதுண்டு; நெய்தல் வளத்தால் நெடுநாளாச் செல்வமழை பெய்யும் பெருநாடு பேணும் திருநாடு; கணிப் பொருள் வளம் தென்னாடு பொன்னாடாய்ச் செல்வ வளங்கொழிக்க இந்நாடு நெய்வேலி என்னுமூர் பெற்றுளது மண்ணுக்குள் பொன்விளைத்து மாண்புயர்ந்த தென்னாட்டில் எண்ணெய்க்கும் நல்ல இரும்புக்கும் பங்குண்டு) அணுவாற்றல் செய்யும் அரும்பொருளும் உண்டு துணுகின் கணிப்பொருள்கள் நூறுண்டு நம்நாட்டில்: வள நாடு ஆற்றுப் புனலும் அருகாது பொங்கிவரும். ஊற்றுப் புனலும் உவந்துாட்டும் நீர்நாடு கற்புவளம் விரவளம் காட்டுதற்குக் கண்ணகியின் பொற்புருவம் அஃதொன்றே போதுமன்றோ? மேலான ஒவியமும் கட்டடமும் ஓங்குபுகழ்ச் சிற்பமுடன் காவியமும் காட்டும் கலைவளங்கள் சேர்நாடு 轟 சோற்றுவளம் ஆற்றுவளம் சொல்லரிய கல்விவளம் மாற்றுயர்ந்த தங்கவளம் மாசில்லா முத்துவளம் எல்லைவளம் மக்கள் வளம் இவ்வளவும் பெற்றுயர்ந்து தொல்லுலகில் மூத்துத் துளிர்க்குந் திருநாடாம்: ஏன் தாழ்ந்தது ே இந்த வளநாட்டார் ஏழைகளாய்க் கூலிகளாய் நொந்து பிறநாடு நோக்கிப் புகுவதுமேன்?