பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பொருளுடைய பொழுதிற்றான் வந்து சூழ்ந்து போற்றுகிற உறவுமுறை வளர்ந்து காணும்; பொருளிலையேல் ஒருபொருட்டா மதியா தன்றிப் புன்மொழிகள் புகலுதற்கும் அஞ்சா தந்தோ! பொருளுளதேல் சாப்பாட்டுக் கூட்டம்; கெட்டுப் போய்விடினோ கூப்பாட்டுக் கூட்டம் என்ற பொருளுரையைக் காட்டுகிற உறவை நம்பிப் புவிதன்னில் வாழ்வதுதான் நன்றோ சொல்வீர்! (18) இப்புவியில் என்னுறவின் முறைதான் சொன்னேன் ஈண்டுள்ளோர் நல்லவர்கள் குறளிற் கூறும் ஒப்புரவு தெரிந்தவர்கள்; திருக்கு றட்கே உயர்வுதரத் தேனப்பன் என்னும் நண்பன் செப்பரிய முயற்சியினால் இங்குக் கண்ட திருக்குறளின் கழகத்தில் உறவு கொண்டோர்; நற்குடும்ப நெறியறிந்து வாழும் சான்றோர் நலமனைத்தும் பெற்றிங்கு வாழ்க! வாழ்க! (19)