பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 பனநாதன் அருளில்லாக் கார னத்தால் பறவைகளாய்ப் பறந்தோடி விட்டார்; மேலும் கனமாக வந்தென்னை எறும்பு போலக் கடித்த ர்கள்; கலப்புமணம் பழித்து ரைத்தார்: குனமில்லாத் தேனியாய்க் கொட்டி னாள்கள்; கூடிவருங் காலத்துக் கூடி வந்தனர் உணவோடு நலம்பெற்றார்; செல்வ மெல்லாம் ஓடிவிடுங் காலத்தில் ஒடி விட்டார் (15) இப்பொழுதும் ஒருவர்திரு மனத்துக் காக என் குடும்பத் துடன் சென்றேன்; வரவு கூற எப்பொழுதும் முன்னிற்போர் எவரும் இல்லை; என்துணைவி வெறுங்கழுத்தும் கையுங் கண்டார்; சிப்பிதரு பொத்தான்கள் இல்லாச் சட்டை சிலைநிகர்க்கும் என்மக்கள் அனைத்துங் கண்டு செப்புகின்றார் பஞ்சைஎன; ஒதுங்கி நின்றார்; சிரித்திருந்தேன் உறவினர்தம் செய்கை கண்டு (16) படுப்பதற்கோர் படுக்கையிலை பாயும் இல்லை; பக்கத்து விட்டிலொரு திண்ணை யோரம் தடுப்பதற்கோ ஆளில்லை சாய்ந்து கொண்டேன்; தவமிருந்து பெற்றமக வொன்றை அங்கே அடிப்பதை நான் கண்டெழுந்து தடுத்து நின்றேன்; அப்பப்ப இப்பொழுதே திருடக் கற்றுக் கொடுப்பதற்கோ அழைத்துவந்தாய்?’ என்று சொல்லிக் குழந்தையின் கைக் கனியொன்றைப் பறித்துச் சென்றான் (17)