பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கலிவெண்பா முன்னுரை நாடி வருவோர்க்கு நற்கல்வி ஊட்டுதற்குக் கூடி வருமுனர்வால் கோவில் இடமெல்லாம் பள்ளித் தலமாக்கிப் பாமரர்க்கும் ஏழையர்க்கும் அள்ளிக் கொடுக்கும் அறிவுப் பணிபுரியும் குன்றா வளநல்கும் குன்றக் குடிமலையில் ஒன்றும் மலைவாழை ஒங்குந் தலைவாழை செந்தமிழே நெஞ்சிற் சிவமாக்கும் செவ்வாழை இந்தச் சுவை வாழைக் கென் வணக்கம் கூறுகின்றேன்; முன்னைப் பழமரங்கள் மூதறிவால் வாழ்மரங்கள் மின்னல் இடிபுயலால் வீழாமல் நிற்குமரம் பற்பலவாய்ச் சூழும் பழவாழைத் தோட்டத்துள் பொற்புடனே நற்கனிகள் புக்குப் பறித்தெடுத்து நல்கும் கவிகாள்! கனியின் நலம் துய்க்க மல்கும் செவியுணர்வின் மாமணிகாள் என்.வணக்கம்; வாழையடி வாழை சங்க இலக்கியங்கள் சாகாக் கனிநல்கிப் பொங்குகின்ற வாழைமரப் பூங்கா எனவுரைத்தார் மூவாத் தமிழ்வளர்க்கும் மு. வ. அவர் மொழியை நாவார வாழ்த்துகிறேன்; நாடு நலங்கொழிக்க ஆயிரம்பல் லாயிரமாய் அவ்வாழை ஒவ்வொன்றும் ஆயினவாம்; பாரதியும் அவ்வழியில் ஒர்வாழை; பாரதியாம் வாழை பயந்த அடிவாழை பாரதி தாசனென்று பாருரைக்கும்; இவ்வாழை மலைவாழை - குன்றக்குடி மலையில் வாழ்பவர் தலைவாழை --- தலைமை தாங்கு பவர் சென் வாழை - காவி உடை அணிந்தவர்