பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நண்போடு வரவேற்றிர் வந்த வந்த நாட்டவரை, உமைமறந்தீர்! அவரைக் கூடிக் கண்மூடிக் கிடந்துழன்றீர்! பண்பி ழந்திர்! r. கண்டகண்ட கோட்பாட்டைத் தழுவி நின்றீர்! பண்பாட்டை முதன்முதலில் உலகுக் கோதிப் பாங்குயர்ந்த நிலைமறந்தீர்! உணர்ச்சி யற்றுக் கண்பாடு கொண்டிங்கே கவலை யற்றுக் கிடக்கின்றீர்! கண்விழித்துக் காண்ப தென்றோ? இன்றெழுந்து தமிழ்காப்பீர்! ஒருமைப் பாட்டை ஏனிழந்தீர்? ஆனாலும் வீரம் எங்கே? குன்றெடுத்த தோளெங்கே? மானம் எங்கே? குறைந்ததுவோ? நான்பிறந்த மண்ணின் பக்கம் நின்றிருக்கும் கல்லெல்லாம் இந்தி கண்டேன் நெடுங்கல்லாச் சுடுமண்ணா ஆகி விட்டீர்! ஒன்றுசொன்னேன் தெருவெல்லாம் தமிழ்மு ழங்க உரைத்த எனைக் கல்லெல்லாம் சிரிக்கக் கண்டேன் சிரிப்பதற்கோ உரிமைப்போர் தொடுத்து நின்றோம்? செந்நீரும் கண்ணிரும் சிந்திக் காத்தோம்? பறிப்பதற்கோ தென்னாட்டார் உரிமை எல்லாம்? பாரதத்தின் பெயர்சொல்லி வடக்கு மட்டும் பருப்பதற்கோ? செந்தமிழ்நற் றமிழர் வாழ்ந்து பாரதமும் வாழ்கவென உணர்ந்தே சொன்னேன் மறுத்துரைத்தால் ஈரோடும் காஞ்சி யுந்தாம் வழிசொல்லும்: புதியதொரு விதியும் செய்யும் " _ கண்பாடு - உறக்கம் டிரோடும் - காஞ்சியும் - அங்குப் பிறந்த பெரியாரும் அண்ணாவும்