பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 என்றுரைத்தான் பாரதி என் னெஞ்சி னுள்ளே; என்னுடலம் நடுநடுங்கி வியர்த்து நின்றேன்; ஒன்றியுளம் பற்றிநின்ற கவிஞன் சற்றே ஒதுங்கி எதிர் நின்றுரைத்தான்; அஞ்சி அஞ்சிப் பொன்றுமுயிர் தாங்குகின்றாய் போ! போ! மானம் போற்றுகின்ற வீரநெஞ்சாய் வா! வா! தாதன் என்று சொல வாழ்பவனே போ! போ! சிங்க ஏறனையாய் அச்சமிலாய் வா! வா! என்றான். ட ஃறொ ைட வெண்பா முடிவுரை வாழையடி வாழைக்கு வாய்மொழியால் வீரத்தைக் கோழை மனத்திற் கொதிப்பேற்றிப் பாய்ச் சிவிட்டான்; சூடு தணியவில்லை சொல்லெல்லாம் தியாக்கிப் பாடும் கவிதைகளில் பாயவிட எண்ணந்தான்; நாடு பொறுக்குமோ என்றெண்ணி நல்ல இளஞ் சூடு படக்கொடுத்தேன்; ஈதும் சுடுமென்றால் குற்றம் எனதன்று; முற்றுந் தலைவாழை பெற்ற சுவையைத்தான் பின்வாழை ஈன்று நிற்கும்; நாநலம் கொண்டார்க்கு நல்ல சுவைநல்கும் பாநலம் வல்ல பரம்பரையில் யானொருவன் ஈனும் கனியை இருந்து சுவைக்கவிட்டு நானும் இருப்பேன் நயந்து.