பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கழகங்களில் இவர்தம் கவிதை நூல்கள் முனைவர் பட்டத் திற்காகவும், எம்.ஃபில் பட்டத்திற்காகவும் ஆ ய் வு க் கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அழகின் சிரிப்பு’’ என்ற இவர்தம் கவிதை 1950-ஆம் ஆண்டு கோவையில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் முதற் பரிசுக்குரியதெனப் பாவேந்தர் பாரதிதாசனால் தேர்ந் தெடுக்கப் பெற்ற சி ற ப் பி ைன யு ைட ய து. 1966-இல் முடியரசன் கவிதைகள்’’ என்ற நூலும் 1973-இல் வீர காவியம்' என்ற நூலும் தமிழக அரசின் பரிசிலைப் பெற்றன. சிறப்புக்குரிய பல பாடல்கள் சாகித்திய அகா தெமியால் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கன்னடத்திலும், சோவியத் மொழியிலும் இவரது கவிதைகள் பல மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1966-இல் பறம்புமலையில் நடந்த பாரி வி ழ வி ல் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இவர்க்குக் கவியரசு’ என்னும் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார். 1979-ஆம் ஆண்டு பெங்களுர் உலகத் தமிழ்க்கழகத்தினர் இவரை அழைத்துப் பொன்னாடை அணிவித்துப் பொற்பேழையும் வழங்கினர். இதுபோலவே இவர்பாற்பயின்ற மாணவர் சிலர் இவர்தம் ம ணி வி ழ ா நாளன்று (7–10–1979) பொன்ாைடை போர்த்துப் பொற்கிழி வழங்கி மகிழ்ந்தனர். 1980-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழக மாநில இலக்கிய அணி , கவிஞரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா வினை சென்னையில் நடத்தியது அப்பொழுது கழகத்தின் சார்பில் டாக்டர் க ைல ளு ர் அவர்கள் பத்தாயிரம் வெண் பொன் பொற் கிழி வழங்கிப் பாராட்டிச் சிறப்புச் செய்தார். 1988-ஆம் ஆண்டு தமிழகப்புலவர்குழு * தமிழ்ச்சான்றோர்’ ’ என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது. 1993-ஆம் ஆண்டு அனைத்து இந்தியத் தமிழ் எழுத் தாளர்கள் சிங்கத்தின் சார்பில், தலைவர் விக்கிரமன் , எழுத்தாளர்களுடன் கவிஞரின் இல்லத்திற்கு வந்து நிதி