பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 செயல்’ என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்த பெருமை இவர்க்குண்டு. சாதிசமயங்களுக்குள் ஆட்படாமை - நன்றி மறவாமைநட்பைப்பேனல்-கொள்கைப் பிடிப்பு - குறிக்கோள் வாழ்வுஉதவும் உள்ளம் - ஒட்டார் பின் செல்லாமை - ஆசிரியர்ப் போற்றல் - ஆகியன இவர்தம் இயற்பிற் சில. எத்தனையோ இடர்ப்பாடுகளும், இக்கட்டுகளும் வந்த போதும், தாம் கொண்ட கொள்கையில் தடம் புரளாமல் தன் மானக் குன்றமாக விளங்குபவர். அரசவைப் பதவிகள் நாடி வந்தபோதும், தம்மை நிறம் மாற்றிக் கொள்ளாது அப்பதவிகளைப் புறக்கணித்தவர். விளம்பரத்தை விரும்பா தவர். எளிமை வாழ்வை விரும்புபவர். 'சங்கப் புலவர் தம் பாடலே பாடல் எ ன் ப தி ல் அழுத்தமான நம்பிக்கை உடைய இவர் பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனாரைத் தந்தை யாகவும் கருதிக் ‘குலமுறை கிளத்தும் கொள்கையுடை பராக விளங்குகிறார். பெரும் பாலும் தன்னை மறந்த லயம் தன் னில்’ இருக்கும் இயல்பினார் புட்டி”களின் துணையால் அன்று; எட்டியவரை சிந்திக்கும் இயல்பினால் கனவிலும் கவிதை பாடுவது என்பது இவருக்கே உள்ள தனித்திறனாகும். . கனவிற்பாடிய கவிதையை மறுநாள் காலையில் எழுந்து வரிமாறாமல் எழுதிவிடும் இவரது ஆற்றல் வியப்புக்குரியது இஃது இயற்கை வழங்கிய அருட்கொடை என்றே கூறல் வேண்டும். குடி யரசு , திராவிடநாடு, நம்நாடு. முரசொலி, மன்றம் , தென்றல், எழில் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு தலை சிறந்த இதழ்கள், இவர்தம் எழுத்தோவியங்களைத் தாங்கி வந்துள்ளன. பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இவர்தம் நூ ல் க ன் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக்