பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சமநிலைப் பாடல் ஏழை அடிமை சாதியில் இழிந்தோர் இல்லை! எவரும் ஒருநிகர் எனவே சாற்றி முழங்கும் சமநிலைப் பாடல் கண்ணிர்த் துளிகள் குளத்தில் மரத்தில் குடிகொளும் பேயென உளத்தில் நடுக்குறும் உரமிலார் அதற்கு மந்திரம் சூனியம் யந்திரம் என்பார் அந்தியில் பகலில் அஞ்சியே சாவார் சிப்பாய் தலையில் சிவப்பைக் காணின் அப்பா என்றே அப்பால் ஒளிவார் கஞ்சி யில்லாக் காரணம் ஓரார் பஞ்சம் பஞ்சமெனப் பரிதவித் திருப்பார் நிலையினைக் கண்டு நெஞ்சு பொறாஅது கதறிச் சிந்திய கண்ணிர்த் துளிகள் பாரதி தந்த பாடல்கள் ஆகும்; வழக்கிடும் மன்றம் கற்பெனப் படுவது கன்னியர் தமக்கே வற்புறுத் துவதை ஒப்புதல் செய்யோம் ஆடவர் தமக்கும் அதனை வைப்போம் ஏடுகள் செய்வோம் இளைப்பிலை உமக்கு மாடுகள் அல்லம் மாதர்கள் நாங்கள் சட்டம் செய்வோம் பட்டம் ஆள்வோம் கட்டினைத் தகர்ப்போம் எனக்கனல் கக்கி மங்கையர் வழக்கிடும் மன்றமும் ஆகும்; மறைநூல் கூடும் பொருளின் கூட்டம் தெய்வம் விண்ணும் மண்ணும் வெயிலும் நிழலும் அறிவும் உயிரும் அனைத்தும் அஃதே (55) (60) (65)