பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 முடிப்புரை சிறந்தபுலச் சான்றோரை ஆக்கித் தந்தால் தென்னகமும் தேயாது வாழும் என்றால் மறைந்துவிட்ட திரு.வி.க., மொழிக்குன் றாய மறைமலையும் பாரதியும் உரிமை வேட்கை உரந்தழுவும் சிதம்பரனார், கல்வி கேள்வி உயர்கம்பன், இளங்கோவும் யாரோ சொல்வீர் திறங்கொண்ட பலர்பலரைத் தந்தும் தெற்குத் தேய்ந்ததுமேன்? ஆட்டுவித்தால் ஆடார் யாரே? (27) ஆட்டுவிக்க ஆடாமல் நாமே ஆள அரசுரிமை எய்தியபின் யாவ ரோடும் கூட்டுறவு கொளல் நன்றாம் தமிழும் வாழும் குலையாமல் தென்னகமும் வாழும் எள்று கூட்டமெலாம் திரு.வி.க. கூறி வந்தார்; குறுகியநோக் கென்றுசிலர் திரித்துச் சொல்லிக் காட்டுவதை நம்பாதீர்! தென்ன கத்தைக் காப்பதுவே நமதுகடன் வாரீர்! வாரீர்! (28) இல ーリー இவ் விழாவில் பேசிய ஒருவர் சான்றோர்களை உண்டாக்கித் தந்தால் தெற்குத் தேயாது என்றார். அவர்க்கு மறுமொழி தரும் வகையில் கவி யாங்கத் தலைப்புகளாகத் தரப்பட்ட சான்றோர்களை அமைத்துப் பாடப் பட்ட து முடிப்புரை.