பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () அரசியலில் அறிஞர் அறிவுடையோன் நல்லா றரசேகின் நல்ல நெறியுடைய நாடாகும் நேரிழையே! முன்பிருந்த ஆள்வோர் குடிகளிடம் அண் டி வரிவாங்கி வாழ்முறைகள் கூறி வழிசெய்தார் அன்றறிஞர்; தம்முட் பகைகொண்ட தார்வேந்தர் போர்தவிர்த்துச் செம்மை நெறி நடக்கச் செய்தார்கள் அன்றறிஞர்; மாதே அரசியலில் மாண்புடன் ஆள்பவர்கள் - தீதிலா யாழுக்குத் தெள் நரம்பே போல்வார்கள், வீணை நரம்பை மிழற்ற விரல்வேண்டும், ஆணை செலுத்தும் அரசுக் கிவர்வேண்டும், பாட்டுச் சிதையாமல் பண்படுத்தி இன்புறுத்திக் காட்டும் இலக்கணமாய்க் காவல் புரிவார்கள், காதல் வளர்ந்தொளிரக் கண்பார்வை எப்படியோ ஒதும் அரசுக் குயர்அறிஞர் அப்படி யாம்; அரசியல் போலிகள் இந்நாட் டரசியலும் இன்னுந் தலைசிறந்த எந்நாட் டரசியலும் எண்ணி எண்ணிக் கற்றிருப்பார் கல்விச் சிறப்பிருக்கும் கற்றபடி பேச்சிருக்கும் இல்லை இவர்க்குநிகர் என்னும் படியிருக்கும் ஆனால் அரசியலில் ஆளும் பொறுப்பேற்கப் போனாலோ அத்தனையும் போயொழியும், அப்பதவி காத்துச் சுவைத்திருக்கக் கற்பனையும் சூழ்ச்சிகளும் மூத்துத் தலைதுாக்கும் மூளை குழம்பிவிடும் வேண்டியவர் வேண்டாதார் வேண்டி அலைந்திடுவர் ஈண்டவரால் புத்துலகம் காண்டல் எளிதாமோ? வல்லவராய் மட்டும் வருபவரால் ஏதுபயன்? நல்லவராய் நாட்டு நலம்விழைவார் வேண்டும்?