பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனும் திைை பும் என்றவுடன் என்னருகில் ஏந்திழையாள் வந்திருந்து குன்றின் குறிஞ்சிக் கிளைவிளைத்த செந்தேனும் கொல்லைப் புனத்துக் கொழுந்தினை யின் மென்மாவும் வள்ளிக் கிழங்கும் வகையாகத் தான்படைத்தாள் கோலைக் காட்சி அந்தச் சுவையை அருந்தியபின் ஆங்கிருந்த சந்தனச் சோலைக்குள் சார்ந்தோம்; ஒரு மரத்தில் பற்றிப் படர்ந்த பசுங்கொடியைக் காட்டினேன் முற்றச் சிவந்த முகஞ்சிவந்து நாணத்தால் என் குறிப்பை மாற்ற எழிலருவி பாரு மென்றாள் தன்குறிப்பை நானுணர்ந்து தையால் உள் கண்போலும் நீலக் கருங்குவளை நெஞ்சாற் பிணைந்ததமைக் கோல இதழ் திறந்து கூர்ப்பாக நோக்குதல்பார்! என்று நான் காட்ட இதழ்தந்த தாமரையை நின்று தவிக்கவிட்டு நீள்சுனைக்குத் தாவி வரும் வண்டொன் றருகிருந்து வாய்சூழல் பாரு மென்றாள்; கண்டனத்தைக் கண்டுகொண்டேன் கைதந்த நல்லாசை வஞ்சித்துக் கைவிட்ட வண்டுச் செயலினை நான் நெஞ்சத்துங் காணும் நினைப்பில்லேன் என்னுங்கால் குன்றத்தார் தொண்டகம் கொட்டும் பறையொலியைக் குன்றத்தாள் கேட்டுக் குலத்தலைவர் வந்துவிட்டார் இன்றுபோய் நாளை இவண்வருவீர்” என்றுரைக்க நன்றாம் எனப்பிரிந்தேன் நான். - தொண்டகம் - குறிஞ்சி நிலப் பறை