பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது கடன் மக்களினம் இவ்வுலகில் இனிது வாழ வாழ்நெறிகள் கூறுமொரு நூல்தான் யாது ? தெக்கணத்துத் திருநாடு தமிழர் நாடு =. தெளிந்துரைத்த திருக்குறளே ; அதையு ணர்ந்து பக்குவமாய் நாம் அணுகி மதித்துப் போற்றிப் பண் புரைக்குந் திருமறையாய்க் காத்தல் வேண்டும் , பொக்கைமனங் கொண்டவர்கள் வள்ளு வற்குப் புண்செய்து திரிகின் ருர் போதும் போதும் (க) கற்றுக் குட்டிகள் கற்றறிந்த சான் ருேரும் திருக்கு றட்குக் கண்டுணர்ந்து பொருள்சொல்ல அஞ்சு கின்ருர் ; சிற்றறிவால் தமிழ்நூலின் பெயர்கள் தாமும் தெரியா தார் புத்துரைகள் சொல்லப் போந்தார் ! கற்றினங்கள் சிறுகுட்டை கலக்கல் ஆகும் கடல்தனையே சேருகக் கலக்க எண்ணின் முற்றுறுமோ ? நீந்துதற்குச் சிறிதும் கல்லார் முழுகாதீர் குறட்கடலுள் என்போம் என்போம் (ίΌ சிலையானுேம் ! கண்டபடி கண்டவர்கள் தமிழர் நூலைக் கதைக்கின் ருர் குழப்புகின் ருர் கேட்பா ரில்லை ; மண்டையடி கொடுப்பதற்கோ சங்க மில்லை ; மனம்வைத்துக் காப்பதற்கோ அரசும் இல்லை : உண்டபடி உறங்குகின் ருர் மக்கள் எல்லாம் உய்வதுதான் எப்படியோ தமிழும் நாமும் ? அண்டையர்கள் மொழிகாக்கும் முறைமை கண்டும் அசையாத சிலையானேம் அந்தோ அந்தோ (0க) i. 100