பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாதும்கம் ஊரென்ருல் ஏதிலர்தம் நாடெல்லாம் சூதுமுறை செய்து சுருட்டி விழுங்குவதோ ? யாதும்.நம் ஊரென்ருல் ஏதிலர் க்கு கம்காட்டைச் சூதுநெறி யறியாமல் சுருட்டிக் கொடுப்பதுவா ?” என்றும், "ஊர்காத்து நகர் காத் (து) உயர்நாடு தனக்காத்துப் பார்காத்து யாதும்ஊர்ப் பண்புணர்ந்து மிகக்காத்துத் தற்காத்துத் தமிழினமுங் காத்துலகங் கேளிர் என்ற சொற்காத்து நல்லறிஞர் சூழ்துணையால் நாம்வாழ்வோம் ' என்றும் பாடி அறிவுறுத்தினமையைக் கேட்டு மகிழ்ந்தோர் பல்லாயிரவர். (பாரதியார் இக்கவிஞருக்குப் பாட்டனர் : பாரதிதாசனர் இக்கவிஞருக்குத் தந்தை போன்றவர். அப்பெருங் கவிஞர் களுடைய வழியிற்சென்று ஒவ்வொரு விதத்தில் அவர்களை யெல்லாம் வென்றுவிட்டார் இவர் என்பதை இந்நூல் முழுதும் ஒதுவோர் கட்டாயம் நன்கறிவர் என்று கருதுகிறேன்.) உள்ளத்தாற் பெருமனிதர் ஆய காமராசரையும், திடங் கொண்டு அரிய பல செய்த பெரியாரையும், செந்தமிழ் நாட்டுக்குச் சிறந்த தொண்டாற்ற முன்வந்துள்ள அறிஞர் அண்ணுவையும் இவர் எத்துணைப் போற்றியுள்ளார் என்பது பாடல்களைப் படிப்போரால் நன்கறியப்படும். 'சிறுவயிறு கழுவுதற்கு மானம் விட்டுச் சீரிழந்து வால்பிடித்தல் வேண்டாம - என்றும், 'மேலுயர்ந்த கோவிலுளும் தமிழே வேண்டும் வல்லுாருய் வருமொழிகள் இங்கு வேண்டாம் : என்றும் முடியரசனுர் முழங்கும் முரசொலி இந்நூலகத்தே கேட்கப்படுகின்றது. --- : கவிஞர் பெருமகனர் முடியரசன் அவர்கள் நெடுங்காலம் உடலுரத்தொடு வாழ்ந்து மேன்மேலும் இதைப்போன்ற கவிச் செல்வத்தைத் தமிழகத்திற்கு வாரி வழங்க வேண்டு மென்று கருதுகின்ற தமிழ் மாணவர் பலரில் நானும் ஒருவன். சென்னை-5, 14-4-1980