பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானத்து வெண்ணிலவாய் நானி ருப்பேன் வட்டமிடும் உறவினர்கள் விண்மீன் ஆவர் கானத்துப் பழுமரத்தில் கனிகள் உண்னக் கடுகிவரும் பறவையினம் போலச் சூழ்வர்; பூநத்தும் தேனிக்கள் கூட்டில் மொய்த்தல் போற்கிளே ஞர் பெருங்குழுவாய் வீட்டில் மொய்ப்பர் ; தேனெத்த வெல்லத்தை மோப்பங் கண்டு தேடிவரும் எறும்பினத்தின் சாரை போல்வார் (சு) ஆவணியில் காதணி நாள் நிகழ்த்த எண்ணி ஆய்ந்தொரு நாள் தேர்ந்தெடுத்து நெஞ்சிற் கொண்டு பாவை நிகர் என்மனேயாள் செவியிற் சொன்னேன்; பாய்ந்தோடி உறவினர்கள் ஆடி மாதம் போவதன்முன் தம்குடும்பம் சுற்றம் சூழப் புகுந்தார்கள்; திடுக்கிட்டுத் துணையைப் பார்த்தேன் "தேவையிலே இனியழைப்பு, செலவு மிச்சம் என்றுரைத்தாள் தேன்மொழியாள் ; திகைத்து நின்றேன் (எ) சாதியினே ஒழிப்பது நம் கடமை என்று தக்கவ8ளக் கலப்புமணம் செய்து கொண்டேன்; காதலில்ை பூத்தமணம் உறவினர்க்குக் கடுகளவும் நறுமணமாய்த் தோன்ற வில்லை; வேதநெறி பிழையாத அன்னர் என்றன் வீட்டுக்குள் வந்துவிடின் என் முன் நின்றே ஏதமிலாச் செயலாற்றும் கொள்கை வீரர் என்றெல்லாம் பட்டங்கள் வழங்கிச் செல்வார் )كy( 110