பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பகைவர் பாரதியின் பேர் சொல்லிப் பாங்குபெறும் நல்லன்பர் வீரமிகு பாடல்களை வெட்டிவிட்டுக் காட்டுகின்ருர்; சூரன் முகத்தில் சுருண்டுவளர் மீசைதனில் \ ஓரங் குறைத்தால் உருவமது பாரதியோ? தாள்குறைத்து மேல்குறைத்துத் தண்டொன்றே கைப்பற்றி ஆள்பிடித்து வாழைஎன ஆர்க்கின்ருர் குதுடையார்: பாரதி வந்தான் வீர உருக்குறைத்து வேடிக்கை காட்டுகின்ற பேரின் செருக்கொழிந்து தீயாதோ? என்றேன்.நான்; "தீயுமடா! தீயுமடா! தீப்பகைவர் தற்செருக்கு நீயுமெழு! நீயுமெழு! நேர் நின்று போர்தொடுப்பாய்” என்ற வுரைகேட்டேன் ஏறனைய பாரதியும் ஒன்றி எனது மனத் துள்ளே நகைத்துநின்ருன்; கானத்து வாழ்புலியாய்க் கத்துபுனல் நீந்திவரும் மீனத்தில் நற்கயலாய் மேல்நோக்கிப் பாய்கின்ற அம்பிருக்கும் வில்லாகி ஆரிருளே ஒட்டுகின்ற செம்பொனிள ஞாயிறெனச் செக்கச் சிவந்துநின்ருன் நின் ருனே நோக்கி நிலையெல்லாம் பேசுகநீ என்றேனே நோக்கி இளையவனே! என் தம்பி! உன்னுளத்தே நின்றிங்கே ஊதுகின்றேன் வெண்சங்கம் முன்னெழுந்து போர் தொடுக்க முற்படு நீ ஒன்றுரைப்பேன்’ என்று தும் சங்கொலியை என்னுல் இயன்றவரை நின்றுாது கின்றேன் நிமிர்ந்து 127