பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண் சீர் விருத்தம் சங்கு முழங்கியது " நாமிருக்கும் நாட்டிற்குத் தமிழ்நா டென்று நாமமிட முறையிட்டோம்; ஆள்வோர் பட்டை நாமமிட்டார் நம்முகத்தில்; மாற்றுக் கட்சி நல்லறிஞர் உரைத்தமையால் மறுத்தோம் என்ருர்; தீமனமா? ஆணவமா? ஆட்சி தந்த செருக்குரையா? அடிமைமனப் போக்கா? இல்லை; நாமமது தமிழரெனத் திரிவோர் நாட்டை நற்பெயரால் அழைப்பதற்கு நாணி அன்ருே? என்னடு தமிழ்நாடென் றியம்பக் கேட்டால் என்செவியில் தேன்பாயும் என்று கூறின் பன்னுடை மதியுடையார் வெறுப்பு ணர்ச்சி ! பகையுணர்ச்சி! என்றெல்லாம் பகட்டு கின் ருர் ; தென்னுடென் றுரைத்தாலோ ஒன்று பட்ட தேயத்தைப் பிரிக்கின்ற உணர்ச்சி யென்பார் ; எந்நாளும் தமிழரெனும் உணர்ச்சி யின்றி இருப்பவரே பாரதத்தின் புதல்வர் என்பார் உன்னுட்டில் தமிழாட்சி கொடுத்து விட்டோம் உயர்கலேகள் தமிழ்மொழியில் உண்டா ? என்று தென்னட்டை உணராதார் கேட்பர் ; உண்டு ; தீய்க்கிரையாய்ப் போனதுண்டு : நெஞ்சை யள்ளும் பொன்னேட்டைத் தின் ருெழித்த நெருப்பும் சொல்லும் போகட்டும் ; புதுக்கலைகள் செய்து காட்டும் முன்னேற்றம் தமிழிலுண்டு ; நேற்று வந்த மொழியாளர் கேட்பதெனில் விந்தை தம்பி 128