பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புக்கள் தலைவர்: திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் M.A.,B.L. இடம்: காரைக்குடிக் கம்பன் திருநாள். நாள்: 18-8-1954 தலைப்பு : கம்பன் கண்டபடி - ஆடவர். 1. போது அனேய. மலர்போன்ற மெல்லிய; 2, நாப்பண். நடுவில்; செல-செல்ல; 8. முறுவல்-புன்சிரிப்பு; 5. வெண் தாடி வேந்தன்-தயரதன்; வெண்தாடி என்றது அவனது முதுமையைக் குறிக்க; .ே மல்வைத்த-மற்போர் செய்தற் கமைந்த, 7. தம்பி - இலக்குவன்; ஆடவன் - இராமன்; 8. வில்லை ஒடித்தமையால் சனகன் மனத்துயரமும் தீர்ந்தது. அதனுல் வில்லும் சனகன் உள வேதனையும் ஒடித்தான் எனப்பட்டது. 9. பொறிபடு - நெருப்புப்பொறி சிந்துகின்ற (கோபம் பொருந்திய); பவ வினே-பிறவிக்குக் காரணமாகிய வினே; மணவினே ஆர்ந்த குமரன் - இராமன்; மூரிவில்வலிய வில் ; 10-வில்லாளன்-குகன்; நாடு கொடுத்திடும் நாயகன். இராமன்; இவ்விருவரும் தோழமை கொண்டமையால் சாதி வேறுபாட்டை ஒழித்தனர் எனப்பட்டது. 11. கோள் அரிவலிமை பொருந்திய சிங்கம்; விண்டு-பிளந்து; 12. செஞ் சரம் - தப்பாத அம்பு ; அஞ்சன வண்ணர் - அஞ்சனமை போன்ற நிறத்தையுடைய இராமன்; குன்று அ ை மஜல போன்ற ; 14. இப்பாடல் பரதன் இராமனே நோக்கிக் 133