பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறுவதாக அமைந்துள்ளது. எனினும் இக்காலத்திற்கேற்ப மற்ருெரு பொருளையும் சுட்டுவது காண்க. 15. புளிஞர் வேந்தன் - வேடர் தலைவனுகிய குகன் ; காழ்ப்பகை-முற்றிய பகை ; விண்டனன் - (கம்பன்) சொன்னுன் ; 16. குருதிஇரத்தம் ; முகத்தால் பேசுகின்ருன் - முகக் குறிப்பால் உணர்த்துகிருன் ; 19. வேட்டு - விரும்பி ; மறம்-வீரம் ; தெவ்வர் - பகைவர்; 21. 'பெண்டிர் எழுந்து பேசமுன் வந்தால், ஆடவர் பேசா தடங்குதல் உண்மை’ என்றது, மனைவி எழுந்து, பேசத் தொடங்கியமையால் ஆடவன் பாடாது வாயடங்கி ஞன் என்னுங் குறிப்பினது. கவியரங்கில் ஆடவர்' என்ற தலைப்பிற்குப் பிறகு அமைந்த தலைப்பு, பெண்டிர் என்ப தாகும். அக்கருத்தையும் உட்கொண்டிருக்கின்றன. அவ் வரிகள். எண்ணம் தலைவர்: புரட்சிக் கவிஞர் திரு பாரதிதாசனர். இடம்: காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரி. நாள்: 31-12-1955. தலைப்பு: நாகரிகம்-எண்ணம். 1. மற்றைக் கோள்களுக்கு ஒளி கொடுக்கிறது கதிரவன். அதைப்போல ஏனைய கவிஞர்கள் விளக்கமுறச் செய்கிருர் தலைவர். 2. இப்பாடலில் சோழன் நலங்கிள்ளியின் நகுதக்கனரே நாடு மீக்கூறுநர் என்ற புறநானூற்றுப் பாடற் கருத்துக் கூறப்படுகிறது. முயக்கு-கலவி; 3. இங்கே பெருஞ்சித்திரனுர்தம் நின்னயந்துறை நர்க்கும் நீ நயந்துறை நர்க்கும் என்ற புறப்பாட்டின் கருத்துக் குறிக்கப் பெறுகிறது. புரவலர்-அரசர், நயந்தோர்-விரும்பிய வர்கள்; சூழாமல்-கேட்காமல்; 134