பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81-82. கதிரோன் மறைதல் காணு நாட்டிற், காரிருள் நுழையக் கண்டது அப்பாட்டு - என்பது, ஆங்கிலப் பேரரசில் கதிரவன் மறைவதில்லை என்று சொல்லி வந்ததையும் நம் நாட்டைவிட்டு ஆங்கிலேயரை அகற்றிவிட்டமையால் அவ் வாட்சியில் கதிரவன் மறைதல் கண்டமையையும் குறிக்கி றது. பாரதி கவிதைகளிற் பயின்றுவரும் சொற்கள் ஆங் காங்கே வருதல் காண்க. நட்பு தலைவர்: புதுக்கோட்டைத் திருக்குறட் கழகத் தலைவர், அண்ணல், திரு. பு. அ. சு. ப் பி ர ம ணி ய ளு ர். இடம் : காரைக்குடிக் குறள்விழா. நாள்: 22-7-1956. தலைப்பு: வள்ளுவர் வாக்கில்-நட்பு. 1. தமிழவேள் - அரங்கில் அமர்ந்திருந்த தமிழவேள் திரு பி. டி. இராசனைக் குறிக்கிறது. 8. அவண் - அ ங் ேக; பொய்யாச் சொல்லன் - பொய்யாமொழிப் புலவர்; 9. தெளிந்த இல் லில் ஒரு தீங்கும் செய ஒவ்வான்’ என்பது, "விளிந்தாரின் வேறல்ல மன்ற தெளிந்தார் இல் தீமைபுரிந்தொழுகுவார்’ என்னும் குறட்கருத்தை அடிப் படையாகக் கொண்டது. 17. நட்புக் கிடையே செல்வம், குலம், சமயம் என்பன தடையாயிருத்தல் கூடாது என்பது விளக்கப்படுகிறது. o 19. தேனப்பன் - காரைக் குடிக் குறட்கழகம் தோன் றக் காரணர்களாயிருந்தவர்களில் ஒருவரும் முதற்செயலாள ரும் ஆகிய நன்மனத் தொண்டர். 136