பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. அப்போது முதலமைச்சராக இருந்தவர் திரு. ஒ. பி. இராமசாமி ரெட்டியார். 24-25. ஒருமுறை திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் கூடியது. அக்கூட்டத்திற்கு வந்திருந்த பெரியார் - ஈ. வே. ரா, அறிஞர் அண்துைரை, நாவலர் நெடுஞ்செழியன், குத்து சி குருசாமி முதலிய எல்லாத் தலைவர்களை யும் பொதுக்குழு உறுப்பினர்களையும் ஆட்சியா ளர் சிறைப்படுத்தினர். இதைக்கேட்டுக் கொதித்தெழுந்த திரு. வி. க. மிகப் பெரிய எதிர்ப்புக் கூட்டமொன்று நடத்தி ஞர். அப்பொழுது போலீசுக் கமிஷனர் தடையுத்திரவைக் கொண்டுவந்து கொடுத்தார். ஆயினும் கூட்டத்தை வெற்றி யுடன் முடித்தார். 28-29. குறள் விழாவில் பேசிய ஒருவர் வடக்கு வாழ் கிறது, தெற்குத் தேய்கிறது என்று சொல்லுதல்கட்டாது; சான் ருேர் க ஆள உண்டாக்கித் தருதல் வேண்டும்’ எனக் கூறினர். அவர்க்கு விடைகூறும் முறையில் கவியரங்கத் தலைப்புக்களாகக் கொடுக்கப்பட்ட திரு. வி. க., மறைமலை யடிகள், பாரதியார், வ. உ. சி. கம்பன், இளங்கோ முதலிய சான்ருேர்களே வைத்துப் பாடப்பட்டது. அழகப்பர் தலைவர்: திருப்பெருந்திரு. குன்றக்குடி அடிகளார். இடம்: காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரிக் கலைவிழா. நாள்: 27-10-1957. தலைப்பு: எட்டுத் தமிழ் வள்ளல் அழகப்பர். கடையெழுவள்ளல்களையும் அழகப்பரையும் சேர்த்து வள்ளல் எண்மர் என்ற தலைப்புத் தரப்பட்டிருந்தது. 1. உயிரே மெய்யே - உயிரும் உடம்பும் போன்ற தமிழே, உயிரெழுத்தும் மெய்யெழுத்துமாகி நிற்கும் தமிழே என இரு பொருள்படுதல் காண்க; புகல் - தஞ்சம்; ஆன்றநிறைந்த. 139