பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தலைவர் துறவு .ெ ந றி யி ன ர ா யி னு ம் தமிழைப் பொறுத்த வரையில் அரசியல் மேடை, கட்சிமேடைகளில் கலந்துகொள்ளும் தமிழ்நெஞ்சம் உடையராதலின் பேசாத மேடையிலும் பேசுகின்ற தலைவர்' எனப்பட்டார். அழகப் பர் மறைவுக்குப் பிறகு இப்பாடல் பாடப்பட்டதாகலின் நெஞ்சில் உற்றிருக்கும் அழகப்ப வள்ளல்" எனப்பட்டது. 3. இப்பாடலில் பின் இரண்டடிகளும் ஏற்றம் கூறுவது போல அமைந்து, அவையடக்கமும் காட்டுகின்றன. ஏற்றமாவது: சங்கத்தார் பொருள் பெற்றுப்பாடினர்; நான் பொருள் பெருது பாடுகிறேன்; வள்ளலின் புகழுக்காகப் பாடுகிறேன். சங்கத்தார் அரசர் முன்னின்று பாடியமையால் முகமன் உரைத்திருக்கலாம்; அழகப்பர் இல்லாதபொழுது நான் பாடுவதால் உண்மையான புகழையே பாடுகிறேன். மேலும் சங்கத்தார் கவிதைகள் விலையில்லாக் கவிதைகள்; அஃதாவது விலைபோகாதவை என்பது. அவையடக்கம்: சங்கத்தார் பாடலில் பொருளுண்டு; என் பாடலில் பொருளே இல்லை, அரசர் இருந்தமையால் மகிழ்ந்து பாடினர் அப்புலவர்; அழகப்பர் இல்லாததால், வருந்திப் பாடுகிறேன் நான். அவர்கள் கவிதை விலை மதிக்க முடியாதவை; என் கவிதை எளியது; எனினும் என் புகழுக் காகப் பாடுகிறேன். 5.6. இக்காலத்தும் வள்ளல் எழுவர் உளர் எனக் கூறலாமென் ருல் இவரைப்போலக் கொடுப்பாரின்மையால் இவர் ஒருவரே தனித்து நிற்கின்றர். அதல்ை முன்னே எழுவ ரொடும் கூட்டி எண்மர் எனப்பட்டது என்று கூறும் முறை யில் அமைந்துள்ளன இவ்விரு பாடல்களும். 8. கல்விக்காக வழங்கியவர் இருவர்; ஒருவர் செட்டி நாட்டரசர் அண்ணுமலையார்; மற்றவர் அழகப்பர். அவர் மன்னர்; இவர் வள்ளல். கொடைமடம் - கொடுப்பதிலே 140