பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வடலூர் வள்ளல்-இராமலிங்க அடிகள்; தேர் தந்த வன்-பாரி, படர்-துன்பம். தமிழகத்திற் பெரும் புயல் வீசிய பொழுது கல்லூரி வட்டத்தில் இருந்த மலர்ச் செடிகள் சிதைந்தமை கண்டு அழகப்பர் கண் கலங்கிவிட்டார்; பாரி முல்லைக் கொடிக்குத் தேரை வழங்கின்ை: இராமலிங்க (வள்ளல்) அடிகள் வாடுபயிர் கண்டு வாடுகிறேன் என்று மொழிந்தார். மூவரும் வள்ளல் என்னும் பெயர் பெற்றமை யால் அஃறிணை உயிரிடத்தும் கருணை காட்டினர் போலும். 19.20. இவ்விருபாடல்களும் பாரி, குமணன், பேகன் என்னும் வள்ளல்களை விட மேம்பட்டவர் அழகப்பர் என்று கூறுகின்றன. பாரி ஒரு கொடிக்கே ஈந்தான்; இவரோ பல கொடிகளுக்கு ஈந்தார், கொடி உவமையாகு பெயராய்க் கொடிபோன்ற பெண்களைக் குறிக்கிறது; அஃதாவது பெண் கல்லூரிக்குத் தமது வீட்டைக் கொடுத்த பெருமையைக் கூறு கிறது. குமணன் தலையைமட்டுந் தந்தான்; இவரோ வாழ் வையே தந்தார். பேகன் ஒரு மயிலுக்குத் தந்தான்; இவரோ பல மயில்களுக்குத் தந்தார். மயில்கள் போன்ற பெண் களுக்கு என்பது பொருள். 22. கடைத்திறப்பு-வாயிற்கதவு திறத்தல்; கோட்டை யூரன்-கோட்டையூரில் பிறந்த அ ழ கி ப் ப ர்; அழுக்காறுபொருமை. o 28. வள்ளல்கள் பால் முடியரசர் பொருமை கொண் டனர்: அதனுல் மாசு கொண்டனர். அம்மாசு நீங்க வள் ள ஆல முடியரசனுகிய நான் பாடுகின்றேன் என்பது கருத்து. மள்ளர்-வீரர்; தொடை நலம்-பாடல் நலம். 24. துன்பம் வந்த காலத்து மனந்தளரவிடாமற் காத்த பெருமக்கள் பெயரால் கல்லூரியில் விடுதிகள் (Hostal) அமைத்து நன்றியறிதலைக் காட்டினர். 25. இப்பாடல் உயிர் நிலைப்பாடலாகும். வள்ளல் என்பதற்கேற்ப, நோய்வாய்ப்பட்டமையும் இறந்தமையும் ஈகை என்றே கூறப்பட்டன. 142