பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் அறிஞன் தலைவர்: பேராசிரியர், திரு. அ. சீனிவாசராகவன் M. A. இடம்: திருச்சிராப்பள்ளி வானெலி நிலையம். நாள்: 14-4-1958. விளம்பி ஆண்டுப் பிறப்பு. தலைப்பு : புதியதோர் உலகு - எங்கள் கனவு - அரசியல் அறிஞன். துரத்துக்குடி முத்து - தலைவர் திரு. சீனிவாசராகவ ைைரக் குறிக்கின்றது; தூத்துக்குடியில் வ. உ. சி. கல்லூரி முதல்வராகப் பணியாற்றுவதால் அவ்வாறு விளிக்கப்பட் டார். நேற்றே விளம்பி-நேற்றே சொல்லி, நேற்றே விளம்பி, இன்று விளம்பி என்னுந் தொடர்களில் நேற்று ஏவிளம்பி இன்று விளம்பி என்று, சென்ற ஆண்டின் பெயரும் வந்த ஆண்டின் பெயரும் அமைந்து கிடப்பது காண்க. தத்தை மொழி - கிளிமொழியே; கவியரங்கில் அரசியல் அறிஞன், கவிஞன், விஞ்ஞானி, உழவன், வணிகன், பக்தன் என்னுந் தலைப்புக்களைப் பற்றிய கவிதைகள் அரங்கேறின. பெண் களைப் பற்றிய பேச்சில்லை. அதனுல் தலைவி, புதியதோர் உலகில் பெண்களுக்கு இடம் தரப்படவில்லை என்று ஊடு கிருள். தலைவன் வானெலியார் சேர்க்காததற்கு நானென்ன செய்வேன், என்று தப்பித்துக் கொள் கிருன். பாண்டியன் செங்கோல் பழுதுபடக் காரணம் ஆண் டோர் அறிஞனில்லாமைதான்-என்றது, கணவனே யிழந்த கண்ண கி 'சான்ருேரும் உண்டுகொல் சான் ருேரும் உண்டு கொல்’ என்றதைக் கருத்திற் கொண்டேயாம். சொல் கென் ருள்-சொல்க என்ருள். தமிழ் வாழ்வு தலைவர்: கவிஞர்-திரு. கண்ணதாசன்; இடம் மதுரை எழுத்தாளர் மன்றம்; நாள்: 28-9-1958. தலைப்பு: தமிழ் வாழ்வு. 143