பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இக்கவியரங்கிற்குத் தலைமைதாங்க ஒப்புக்கொண் டிருந்தவர் வர இயலாமையால், அக்கூட்டத்திற்கு வந்திருந்த திரு. பரந்தாமர்ை அவர்களைத் தலைமைதாங்க வேண்டினர். அவரும் மறுப்பின்றி இசைந்து கவியரங்கை நடத்திவைத்த னர். ஆதலின் சமயத்தில் உதவுகின்ற” என்று அடைமொழி தந்துரைக்கப்பட்டது. தமிழ்ச் சிங்கப்பாரதி - நாவலர், ச. சோமசுந்தர பாரதியார். விழாவைத் தொடங்கிவைத்த வர் இவரே. 2. அறிஞர் அண்ணுதுரை அவர்களும் கவியரங்கம் நிகழும்போது பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கட்காக இப்பாடல் பாடப்பட்டது. தென்றலாக உருவ கம் செய்யப்பெற்றிருக்கின்ருர், பொதியத் தென்றல் வாடை வரின் (வாடைக்காலம் வந்தால்) அடங்கிவிடும்; காஞ்சித் தென்றல் வாடைவரின் (வடக்கிலிருந்து அடக்குமுறை வந் தால்) புயலாகும். 7. மண்ணெண்ணெய்த் துணைகொள்ளல் - புகை வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துக்களைத் தார்கொண்டு அழிக்கும்பொழுது, மண்ணெண்ணெயைத் தடவி அவ் வெழுத்துக்களுக்கு மெருகேற்றிய செயலைக் குறிக்கிறது. 14. பொறுக்குகின்ற, கிறுக்கரிடம் என்னுஞ் சொற்களில் அமைந்துகிடக்கும் நயங்களைக் கண்டுகொள்க. 22-23. இவ்விரு பாடல்களிலும் தென்றல், முரசொலி, தென் னகம், திருநாடு (திராவிடநாடு), மன்றம், போர் வாள். இன முழக்கம், முல்லை, முத்தாரம், நம்நாடு, வி டு த லே, தனியரசு, மக்களாட்சி, திராவிடன் முதலிய இதழ்களின் பெயர்கள் அமைந்திருத்தல் காண்க. பாரதியார் தலைவர்: திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார். இடம்: சரபோசி மன்னர் கல்லூரி (தஞ்சை), கலேவிழா. 149