பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உண்டா ? வானெலியில் இசையரங்கில் தமிழ்தான் உண்டா ? வளங்கொழிக்கும் நிழற்படத்தின் பேச்சில் பாட்டில் தேனமிழ்தத் தமிழுண்டா ? பழிக்கக் கண்டோம்; தெளிவின்றி ஒன்றிரண்டு தமிழைச் சொல்லும்; ஏனென்று கேட்பதற்குத் தமிழர் உண்டா? எடுத்துரைப்பார்க்(கு) அத்துறையில் இடமே யில்லை! கானின்ற அத்திப்பூ பூத்தாற் போலக் காண்கின் ருேம் ஒன்றிரண்டு தமிழ்ப்ப டங்கள் (க) வாழ்த்தொலிகள் மிகுகின்ற திருமணத்தில் = வடமொழியாம் செத்தமொழி சுமந்து செல்லும் காழ்ப்புமிகும் மொழிப்பகைவர் புலம்பல் நன்ருே? கண்கெட்டுத் திரிவது வோ? வேற்றி னத்தைத் தாழ்த்துகிறேன் எனக் கருதேல்; அவ்வி னத்தார் தமிழ்த் தலைவர் தலைமைகொள மனங்கொள் வாரோ? தாழ்த்துவது நாமன்று; நம்மி னத்தைத் தாழ்த்துகிருர்; தாழ்வதுவோ தமிழ வாழ்வு? (ίο) செய்தித் தாள் நடத்திவரும் திருக் கூட் டத்தார் செய்துவரும் மொழிக்கொலையை நினைத்தால் நெஞ்சம் வெய்துயிர்த்துச் சா வதன் றி வழியே யில் லே; வேண்டுமெனக் கொலைசெய்யும் இதழ்கள் தம்மைக் கொய்தெறிய மனமின்றி நாமே காசு கொடுத்தவற்றை வளர்க்கின் ருேம்; துணிந்தெ ழுந்து செய்யதமிழ் இதழ் நடத்த வருவோர்க் காணின் சிரித்தொதுக்கி விடுவதுவோ தமிழ வாழ்வு? (0க) 72