பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் கடவுளும் சிவபெருமான் மனைவியுடன் முருகன் என்னும் -- சிறுவனையும் உடன் கொண்டு மதுரை நாட்டில் உவகையொ டு தமிழ்மொழியின் சுவையைக் கூடி உண்ணுதற்கே அவதரித்தார் என்பர் சைவர்; தவமுனரியா ம் திருமழிசை பாடல் கேட்டுத் தண்டமிழின் பின் சென்ருன் திருமால் என்பர்; இவரெல்லாம் சமயத்தில் தமிழைக் கூட்டி இனிதா கப் பேசிடுவார் ஏற்றங் கொள்வார் (ίδα-) கோவிலுக்குள் தமிழ்மொழியைப் புகுத்தல் காணின் கொதித்தெழுவார் மேற்படியார் ; முதலில் நின்று தேவனுக்குத் தமிழ்சொல்லல் தீமை என்பார்: தேவருக்குப் பாடையுண்டு அதைவி டுத்துச் சிவனிலாத் தமிழ் சொன் குல்ை செத்தோம் என்பார்; சிவன்மாலும் செத்தொழிவார் என்பார் அந்தோ! கூவுகிற இக்குரற்குச் செவிகொ டுத்துக் குலைவதுவோ தமிழ்வாழ்வு? ஆய்ந்து சொல்வீர்! (கை) அரசியல் மொழியில் பொதுமொழியாம் எனும்பேரால் வளமே யில்லாப் புதுமொழியைச் சிறுமொழியைப் பள்ளிதோறும் புது வழியில் புகுத்துகின் ருர் இந்த நாட்டில்! புன் மொழியின் அடிமைச ளாய்ப் புத்தி கெட்டுக் கதியற்றுப் போவதுவோ தமிழர் எல்லாம்? கையற்றுப் போவதுவோ தமிழின் செல்வம்? மதுநிகர்த்த செந்தமிழின் துாய்மை எல்லாம் மாய்வதுவும் தேய்வதுமோ தமிழ வாழ்வு? (ίδα") 73