பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிவெண்பா பாண்டி எமக்களித்த பாரதி தாசனெனும் பாண்டியனே ! எங்கள் பரம்பரைக்கு நற்றலைவா ! சார்ந்து கவியரங்கில் தண்டமிழால் பாப்புனைவிர் ! ஆர்ந்திங்கு வந்த அவையோ ரே ! என்.வணக்கம்; - M வள்ளல் மலை துாய மனத்தொண்டர் சுப்ரமண்யத் தோன்றல்தமை மேய புகழ் போல மேலோங்கு நல்லமலை; பொன்னுடை போர்த்திப் பொலியுமவர் தோற்றம்போல் மின் டுை மேகங்கள் மேற்போர்த்த பச்சைமலை; பண்ணிசைக்கும் வண்டினஞ்சேர் பைம்பொழில்கள் சூழும8ல; அண்ண லார் நெஞ்சம்போல் தண்ணென் றிருக்குமலை; வண்ண மலர் தோய்ந்து வாசம் பரிமாற நண்ணும் குளிர் தென்றல் நாடோறும் வீசும8ல; 77