பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுக வீரம் ! வேலெடுத்துப் போர் தொடுத்த வீரம் எங்கே ? வெங்குருதி வாளெங்கே ? தோள்கள் எங்கே ? கோலெடுத்த பேரெல்லாம் ஆள வந்தார் கொட்டாவி விட்டபடி துரங்கு கின்ருய் ! மாலுடுத்த தமிழ் மகனே ! மானம் எங்கே ? மயங்கா தே விழி எழு ! பார் ! உலகை நோக்கு ! கால்பிடித்து வாழ்வதுவோ தமிழ வாழ்வு ? கானத்துப் புலிப்போத்தே வீரங் காட்டு ! (உக) 76