பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

9


தமிழ் மொழி என்ற மேல் நாட்டு மொழி ஆய்வாளர்களது கருத்துக்களைப் படித்தவன் நான்! உண்மையும் அதுதானே!

“நான் உங்களுடைய மொழியைப் பெருமைப்படுத்திய பிறகு, நீங்கள் குயிலைப் போலக் கூவி, உங்களது தாய் மொழியிலே பாடி என்னைப் பாராட்டாமல், யாரோ கற்றுக் கொடுத்த மொழியிலே பாராட்டிப் பாடலாமா? இது அவமானம் அல்லவா? நமக்கு?

“உங்களுடைய தாய் மொழியான தமிழிலேயே என்னைப் பாராட்டியிருக்க வேண்டாமா? இனியாகிலும், தாய் மொழியிலேயே உமது எண்ணங்களைச் சிந்தித்துப் பாராட்டுங்கள்! பேசுங்கள்; எழுதுங்கள்; பாடுங்கள்; அது இந்திய நாட்டுக்கே பெருமை, இவ்வாறு கவிஞர் தாகூர் அறிவுறுத்தினார்.

கவிஞர் தாகூர், மதுரை அறிஞர்கள் இடையே தனது தாய் மொழியான வங்காள மொழியில் பேசியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சாந்திநிகேதனம் பொறுப்பாளராக இருந்த ஆண்ட்ரூஸ் என்ற ஆங்கிலேயர்.

இந்த மொழிபெயர்ப்பினை கவிஞர் தாகூர் நடத்திய ‘பாரதி’ என்ற மாத ஏட்டிலே 1914-ஆம் ஆண்டு டிசம்பர் இதழிலே ஆண்ட்ரூஸ் என்பவர் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். கட்டுரைக்குத் தலைப்பு ‘தாய் மொழிப் பற்று ஏன்?’ என்பதாகும்.

கவிஞர் தாகூர், ஆங்கிலத்திலே வாழ்த்துப் பாடிய தமிழறிஞரைக் கண்டித்த அறிவுரையினை கேட்டு வெட்கமடைந்த மற்றொரு தமிழறிஞர், தனது வாழ்த்துப் பாடலைப் பாடாமலே மறைத்து வைத்துக் கொண்டபடியே வெளியே சென்றார்.