பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

37பிறகு, லண்டன் மாநகரிலே உள்ள ஓர் ஆங்கிலக் கல்லூரியில் சேர்ந்து இங்கிலீஷ் இலக்கியங்களைக் கற்றார். ஏறக்குறைய 18 மாதங்கள் அக் கல்லூரியிலே சேர்ந்து அவர் படித்தும்கூட, எந்த ஓர் இலக்கியப்பிரிவிலும் அவர் தேறவில்லை. மாறாக, ஆங்கில மாணவர்கள் சிலரிடம் அரிய நண்பராக, அவர் நெருங்கிப் பழகினார். அவர்களிடம் நட்பு பெற்றதுதான் அவருக்கு லாபமாக இருந்ததே தவிர, எந்தப் பட்டமும் பெறாமலேயே அவர் இந்தியா திரும்பி வந்தார்.

எந்தப் படிப்பும் படிக்காமல், எந்தப் பட்டமும் பெறாமல், எடுத்த பாடப் பிரிவுகளையும் முடிக்காமல் அரை குறையாகவே ரவீந்திரா் இருப்பதைக் கண்ட குடும்பத்தினர் அனைவரும் மிகவும் கவலையும்- வருத்தமுமுற்றார்கள். அதனால், சட்டப்படிப்பு படிப்பதற்காக மறு ஆண்டே அவர் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கல்கத்தா நகரிலே இருந்து தனது அண்ணன் மகனுடன் கப்பல் ஏறினார்! இருவரும் சென்னை துறைமுகம் வந்தபோது, ரவீந்திரர் அண்ணன் மகன் நோய் வாய்ப்பட்டார். அதனால், ரவீந்திரர் லண்டன் போகாமல், சென்னையிலே இருந்து நேராகக் கல்கத்தா சென்று விட்டார். சட்டப் படிப்பும் இத்துடன் முற்றுப் பெற்று விட்டது. இப்போது ரவீந்திரருக்கு இருபது வயது. கிழக்கு வங்காளத்திலுள்ள நிலங்களில் விவசாயம் செய்யும்படி தேவேந்திரா் ரவீந்திரரிடம் அதற்கான பொறுப்புகளை எல்லாம் ஒப்படைத்தார்.

சட்டப்படிப்பு படிக்க லண்டன் சென்ற ரவீந்திரர் சென்னை துறைமுகத்தோடு மீண்டும் கல்கத்தா திரும்பிய பிறகு, மறுபடியும் வழக்குரைஞர் பணிக்காகக் கல்வி கற்றிடும்