பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

49



என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு ஆங்கில மோகிகளாக நடமாடுவது உயர்ந்த நாகரிகமாகாது என்று கண்டித்தார் வங்காளி ஒருவன் வங்க மொழியிலே பேசாமல் வேற்று மொழியிலே பேசுவது பிறந்த மண்ணுக்குச் செய்யும் துரோகம் என்று முழக்கமிட்டார். பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு பல்கலைக்கழகம் அவரை அழைத்தபோது, வங்கமொழியிலே அங்கே முழக்கமிட்டு தனது தாய்மொழிக்கு உயர்வு தேடினார்.

வங்கமொழியை வளர்ப்பதுதானே வங்காளியின் உரிமை? அதைவிடுத்து இங்கிலீஷ் மொழிக்கா அவன் பெருமை தேடுவான்? தனது தாய் மொழியை அவனவன் வளர்க்காமல் அதற்குப் பெருமை சேர்க்காமல், பிற மொழிக்குப் புகழ் தேடி அடிமையாகவா வாழ்வான்? என்ற கேள்விகளை எல்லாம் பட்டமளிப்பு உரையிலே எழுப்பினார்!

தாய் மொழி உரிமைக்காக மட்டுமே அவர் போராடவில்லை. கிராம முன்னேற்றங்களுக்காகவும் அவர் அயராது உழைத்தார். குறிப்பாக, வங்க மாநிலத்தில், பத்மா என்ற ஆற்றங்கரையிலே உள்ள நிலபுலங்களைக் கவனிக்கும் பொறுப்பை அவரது தந்தையார் ஒப்படைத்த பிறகு. கிராமங்கள் என்றால் என்ன? உழவர்கள் உழைப்பு என்பது என்ன? கிராமங்கள் சீரழிந்து, சிறப்பிழந்து நிற்பது ஏன்? என்ற காரணங்களை அவர் கண்டுணர்ந்தார்.

கிராம மக்கள் அரசியல்வாதிகளை நம்பி, பணக்காரர்களுக்கு அடிமையாகி, தங்களது முன்னேற்றங்களுக்காக உழைக்கும் தன்னம்பிக்கைகளையும், முயற்சிகளையும் செய்யாமல் கோழைகளாய், ஊமைகளாய் வாழ்வதைக் கிராமங்களுக்கு நேரில் சென்று கண்டறிந்தார். அவர்களை